உலகம் செய்திகள்

நைஜீரியாவில் பயங்கரம்: கொள்ளையர்களால் 70 பேர் கொலை. பலர் கடத்தப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் மத்திய மாகாணமான பிளாடீயூவில் உள்ள 4 கிராமங்களுக்குள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் சென்ற கொள்ளைக்குழுவினர் நடத்திய தாக்குதல்களில் 70பேர் கொல்லப்பட்டனர்.

உந்துருளிகளில் சென்ற 100-க்கும் மேற்பட்ட கொள்ளையர்களே இந்த கொலைகளை புரிந்துள்ளனர்.

வீடுகளில் இருந்த பெண்கள், சிறுவர்கள் உட்பட்ட அனைவரையும் வீதிக்கு இழுத்து வந்து அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்னர், வீடுகளில் இருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துவிட்டு வீடுகளுக்கு தீவைத்துள்ளனர்

இந்த கொடூர தாக்குதலின் பின்னர் பல கிராம மக்கள் கொள்ளையர்களால் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் நைஜீரியாவின் கதுனா மாகாணத்தில் பயணிகள் தொடரூந்தை வழிமறித்து,இ துப்பாக்கிச்சூடு நடத்திய கொள்ளை குழுவினர், 8 பேரை கொலை செய்துவிட்டு ஏராளமான பயணிகளை கடத்தி சென்றது நினைவுகூரத்தக்கது.

Related posts

மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை!

Thanksha Kunarasa

கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு

Thanksha Kunarasa

உக்ரேன் தலைநகரில் வெடிப்பு சத்தங்கள்; ஐரோப்பிய நாடுகள் பரபரப்பு .

Thanksha Kunarasa

Leave a Comment