உலகம் செய்திகள்

தென் ஆப்பிரிக்கா வெள்ளத்தில் சிக்கி 45 பேர் பலி – 70 ஆண்டுகால இந்து கோயில் சேதம்

தென் ஆப்பிரிக்காவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 45 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா நாட்டின் டர்பன் மாகாணம் குவாஹுலு-நடாலா நகரில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இதனால் அங்கு பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்தன. சாலைகள் துண்டிக்கப்பட்டன.

இதற்கிடையே வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். மாயமான பலரை தேடும் பணியை மீட்புக்குழு துரிதப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், டர்பனில் உள்ள சாட்ஸ்வர்த் நகரில் 70 ஆண்டு காலத்துக்கும் மேலாக உள்ள இந்து கோயில், கனமழை காரணமாக முழுமையாக சேதமடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கையில் வேலை நாட்களின் எண்ணிக்கையை குறைக்க யோசனை

Thanksha Kunarasa

மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு

Thanksha Kunarasa

பிரான்ஸில் ஓய்வு பெறுவதற்கான வயது எல்லை 65 ஆக அதிகரிக்கும் மக்ரோனின் தேர்தல் முன்மொழிவு !

namathufm

Leave a Comment