உலகம் செய்திகள்

தென்ஆப்பிரிக்காவில் 2 புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டுபிடிப்பு

தென்ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட, ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ், தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருகிறது.

அந்த வகையில், தற்போது பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் எக்ஸ்.இ. என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் மரபணு மாற்றம் அடைந்த 2 புதிய ஒமைக்ரான் வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா தொற்றுநோய் தடுப்பு மையத்தின் இயக்குனர் துலியோ டி ஒலிவேரா கூறுகையில் ‘தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. அவற்றுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ளன.

புதிய வைரஸ்கள் தென்ஆப்பிரிக்காவில் தொற்றுநோய்களின் அதிகரிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும், அவை பல நாடுகளின் மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் போட்ஸ்வானா, பெல்ஜியம், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இந்த புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன’ என்றார்.

Related posts

உக்ரைன், ரஷ்யா போன்று இலங்கையிலும் மோதல் ஏற்படும்! – தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை

Thanksha Kunarasa

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவியில் இருந்து இராஜினாமா

Thanksha Kunarasa

பதவி விலக மாட்டேன்: பாக்கிஸ்தான் பிரதமர் உறுதி

Thanksha Kunarasa

Leave a Comment