பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று தேர்தல் தொடர்பான புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
முதலாம் சுற்று தேர்தல் இடம்பெற்ற உடன் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் – போட்டியாளர்களான மக்ரோன் மற்றும் மரீன் லு பென் மிக நெருக்கமான (மக்ரோன் 51% – மரீன் லு பென் 49%) வாக்கு வித்தியாசத்தில் இருந்தனர்.
அதையடுத்து, இன்று ஏப்ரல் 13 ஆம் திகதி Sopra Steria கருத்துக்கணிப்பு நிறுவனம் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தது. அதில் மக்ரோன் மற்றும் மரீன் லு பென் இருவருக்குமிடையே வாக்கு வித்தியாசம் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த புதிய கருத்துக்கணிப்பில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 55% வீத வாக்குகளுடனும், மரீன் லு பென் 45% வீத வாக்குகளுடனும் உள்ளனர்.
முதலாம் சுற்று வாக்கெடுப்பின் பின்னர், பல அரசியல் தலைவர்களும் இம்மானுவல் மக்ரோனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதையடுத்து இந்த வாக்கு வித்தியாசம் அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்பை மேற்கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.