முத்துராஜவெல, கெரவலப்பிட்டியில் அமைந்துள்ள எரிவாயு சேமிப்பு முனையத்தின் செயற்பாட்டை 5 நாட்களுக்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சேமிப்பு முனையம் இன்று (13) முதல் 17ம் திகதி வரை மூடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் விநியோக நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு விடுமுறை காரணமாக முனையம் மூடப்படும் என அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் இன்னும் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக எரிவாயுவுக்காக வரிசையில் நிற்கும் எமக்கு, நாளைய தினம் சிங்களm தமிழ் புத்தாண்டின் போதும் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளைm இன்றும் காலி கராபிட்டிய பிரதேசத்தில் எரிவாயு கோரி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.