உக்ரைன் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியலமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பலரை ரஷியா சிறைகளில் அடைத்துள்ளது என உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன் முறையாக உக்ரைனில் ரஷியாவின் படையெடுப்பை இனப்படுகொலை என குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் கூறுகையில், உக்ரைன் குடிமக்களுக்கு எதிராக ரஷியா நடத்திய போர் இனப் படுகொலை என தெரிவித்தார்.
மேலும் ரஷிய அதிபர் புதின் உக்ரைனியர் என்ற எண்ணத்தைக்கூட அழிக்க முயற்சிக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.