இலங்கை செய்திகள்

இரண்டு மடங்காக அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலை

சந்தைகளில் நேற்றையதினம் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலை சராசரி விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, ஒரு கிலோ போஞ்சி 315 ரூபாயாகவும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 215 ரூபாயாகவும், கத்தரிக்காய் ஒரு கிலோ 265 ரூபாயாகவும், சிவப்பு வெங்காயம் கிலோ 325 ரூபாயாகவும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 295 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது.

பேலியகொட மீன் சந்தையில் நேற்றைய தினம் மீன்களின் விலை பாரிய அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளன.

அதற்கமைய ஒரு கிலோ கிராம் கொப்பரா 1600 ரூபாயாகவும், தோரா ஒரு கிலோ 2000 ரூபாயாகவும், தலபத் ஒரு கிலோ 1250 ரூபாயாகவும், பலயா ஒரு கிலோ 550 ரூபாயாகவும், சாலயா ஒரு கிலோ 280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஹப்புத்தளையில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன்.

namathufm

தாயும் நான்கு பிள்ளைகளும்வீட்டினுள் சடலங்களாக மீட்பு!

namathufm

மக்ரோனின் தொலைக்காட்சிப் பேட்டி – எரியும் நெருப்பில் எண்ணெய் எதிர்க்கட்சிகள் தெரிவிப்பு !

namathufm

Leave a Comment