இலங்கை செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு கிடைத்த முதல் வெற்றி

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான முதலாவது சுற்று உத்தியோகபூர்வ கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல் ஒன்லைன் ஊடாக இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையின் சார்பில் நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியுடனான இந்த கலந்துரையாடல் சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான இந்த முதல் சுற்று பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, இலங்கை நிதி அமைச்சர் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் அடுத்தக்கட்ட கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வழிவகை செய்யும் நோக்கில் அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

எப்படியிருப்பினும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த பின்னரும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 327 ரூபாயை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நுவரெலியாவில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

namathufm

கட்டணம் செலுத்தாததால் டீசலுடன் 7 நாட்களாக நங்கூரமிட்டுள்ள சிங்கப்பூர் கப்பல்

Thanksha Kunarasa

யாழில் கோவிலுக்கு வருகை தந்தவர் மயங்கிவிழுந்து மரணம்

Thanksha Kunarasa

Leave a Comment