NATO-வில் பின்லாந்தும், ஸ்வீடனும் இணைவதற்கு எதிராக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
NATO-வில் இணைய பின்லாந்தும் ஸ்வீடனும் தீர்மானித்துள்ளமைக்கு ரஷ்யா எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.
இவ்வாறான இணைவுகள் ஐரோப்பாவில் குறித்த நாடுகளின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த செயற்பாடு கூட்டணி மோதலை நோக்கிய நகர்வாக அமைந்துள்ளதாக Kremlin பேச்சாளர் Dmitry Peskov தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உக்ரைன் – ரஷ்யா போர் அதிகரித்துள்ள நிலையில், தமக்கு உதவுமாறு உக்ரைன் சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது