இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு – பல நகரங்களில் பொலிஸார் குவிப்பு

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அனைத்து முக்கிய நகரங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மக்கள் நகரத்திற்கு வந்தால் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை தடுக்கும் வகையில் விசேட பொலிஸ் குழுக்கள் வீதி கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அதிக வேகமாக மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Related posts

முதல் தடவையாக தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது!

namathufm

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி உதவியை கோருகின்றது இலங்கை!

namathufm

ஜிம்பாப்வேயில் பேருந்து விபத்து: 35 பேர் பலி

Thanksha Kunarasa

Leave a Comment