இலங்கை செய்திகள்

சந்தையில் மீண்டும் கோதுமை மா விலை அதிகரிப்பு

சந்தையில் மீண்டும் கோதுமை மா விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களில் ஒன்று கோதுமை மா விநியோகத்தை நிறுத்தியுள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த வாரம் 180 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் தற்போதைய விலை 210 தொடக்கம் 220 ரூபா வரை அதிகரித்துள்ளது.

கோதுமை மாவிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ள நிலையில், வௌி மாவட்ட சந்தைகளில் பல்வேறு விலைகளில் கோதுமை மா விற்பனை செய்யப்படுவதை காண முடிந்தது.

மலையகப் பகுதிகளில் அதிக விலைக்கு கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாக அறிய முடிகிறது.

மட்டக்களப்பின் சில பகுதிகளில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

தமது வர்த்தக நிலையங்களுக்கு கோதுமை மா விநியோகிக்கப்படாமையே தட்டுப்பாட்டிற்கு காரணம் என வர்த்தகர்கள் கூறினர்.

Related posts

அரசாங்கத்திற்கு எதிராக யாழில் இன்றும் ஆர்ப்பாட்டம்

Thanksha Kunarasa

தமிழர் திருநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா..! காணொளி இணைப்பு.

namathufm

சமூக வலைத்தளங்கள் மீதான தடை இன்று(03) மாலை 3.30 மணிக்கு நீக்கம் – தகவல் தொழில்நுட்ப அமைச்சு

Thanksha Kunarasa

Leave a Comment