ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர், யுவதிகள் உட்பட மக்கள் காலி முகத்திடலில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் இன்று பிரபல பாடகி கலாநிதி நந்தா மாலினி, திரைப்பட இயக்குனரும் பாடலாசிரியருமான பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, நடிகை சுவர்ணா மல்லவாராச்சி உட்பட பிரபல கலைஞர்கள் சிலர் இன்று கலந்துக்கொண்டனர்.
சுனில் ஆரியரத்ன மற்றும் நந்தா மாலினி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் நந்தா மாலினி பாடல் ஒன்றையும் பாடினார்.
கொழும்பு காலி முகத் திடலில் இன, மத பேதமின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர், யுவதிகள் உட்பட பொது மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, கலைஞர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினர் ஆதரவளித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
