3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 3 தினங்களுக்குள் நாளாந்தம் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாளைய தினமும்(12) மற்றுமொரு எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், எரிவாயுவை பெற்றுக்கொள்ள மக்கள் தொடர்ந்தும் வரிசையிலேயே காத்திருக்கின்றனர்.