இலங்கை செய்திகள்

ஜனாதிபதி இன்று அமைச்சரவையை நியமிக்க உள்ளதாக தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் அமைச்சரவையை நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட சிலருக்கு மீண்டும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் முன்னாள் சிரேஸ்ட அமைச்சர்கள் சிலருக்கு எந்தவிதமான பதவிகளும் வழங்கப்படும் சாத்தியமில்லை என குறிப்பிடப்படுகின்றது.

15 முதல் 25 பேர் வரையில் இந்த புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பூட்சா படுகொலைகள் இனப்படுகொலையா?

namathufm

நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி வழங்கப்போகும் செய்தி

Thanksha Kunarasa

நாட்டிலிருந்து வெளியேறினார் நிருபமா ராஜபக்ஷ

Thanksha Kunarasa

Leave a Comment