இலங்கை செய்திகள்

ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவு

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளது.

எவ்வாறாயினும் நாளை (12) ஜனாதிபதியுடன் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (10) இரவு 7 மணியளவில் ஆரம்பமானது.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்த 11 அம்ச தீர்மானத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், குறித்த பிரேரணையில் ஜனாதிபதி பல திருத்தங்களைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்பங்கள் குறித்தும், புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் பிரதமரை நியமனம் அல்லது புதிய அமைச்சரவை நியமனம் குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்படவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கனவே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு

Thanksha Kunarasa

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் – மீண்டும் வென்றால்.. – நாட்டுக்கான திட்டங்கள் அறிவிப்பு!

namathufm

தலவாக்கலையில் மூதாட்டியை கொலை செய்து காதணி திருட்டு

Thanksha Kunarasa

Leave a Comment