காலி – தவலம பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் ஒருவர் இன்று(11) உயிரிழந்துள்ளார்.
இன்று(11) அதிகாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டீசலை பெற்றுக் கொள்வதற்காக பல மணி நேரம் காத்திருந்த லொறி சாரதியொருவர் சாரதி ஆசனத்தில் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
பதுவத்த பகுதியை சேர்ந்த 43 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளதுடன் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எரிபொருளுக்கான வரிசைகளில் காத்திருந்த ஐவர் இதுவரையில் நாட்டில் உயிரிழந்துள்ளனர்.