இலங்கை செய்திகள்

21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

21 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுக்கான முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

பிரதமர் மஹிந்தவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Thanksha Kunarasa

உக்ரைனிடம் சரணடையும் ரஸ்ய துருப்புக்கள்

Thanksha Kunarasa

உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு 9-வது இடம்

Thanksha Kunarasa

Leave a Comment