மக்ரோன் – மரின் லூ பென் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவு! அதிபர் தேர்தலின் முதற் சுற்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிபர் மக்ரோன் 28.05 சத வீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றிருக்கிறார். அடுத்த நிலையில் மரின் லூ பென் 24.02 வீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளார். இருவரும் ஏப்ரல் 24 ஆம்திகதி நடைபெறுகின்ற இரண்டாவதுசுற்றில் வாக்காளர்களை எதிர்கொள்ளவுள்ளனர். தீவிர இடது சாரி ஜோன் லூக் மெலன்சோன் குறிப்பிடக் கூடிய வெற்றியாக20.02 வீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தை அடைந்துள்ளார். புதிதாக அரசியலில் பிரவேசித்த தீவிரவலது சாரி எரிக் செமூர் 7.01 வீதமானவாக்குகளை மட்டுமே வெல்ல முடிந்துள்ளது. அதேசமயம் வலதுசாரி ரிப்பப்ளிக்கன் வேட்பாளர் வலெரி பெக்ரெஸ் அம்மையார் 5. 01 வீத வாக்குகளுடன் ஐந்தா வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.12 வேட்பாளர்களும் பெற்ற வாக்கு வீத ங்கள் வருமாறு :
Emmanuel Macron: 28.5%
Marine Le Pen: 24.2%
Jean-Luc Melenchon: 20.2%
Eric Zemmour: 7.1%
Valerie Pécresse: 5.1%
Yannick Jadot: 4.4%
John Lassalle: 3%
Fabien Roussel: 2.4%
Anne Hidalgo: 1.9%
Nicolas Dupont-Aignan: 1.8%
Philippe Poutou: 0.8%
Nathalie Arthaud: 0.6%
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.