பிரான்ஸில் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 10) நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில், தற்போதைய அதிபா் இமானுவல் மேக்ரான் மீண்டும் போட்டியிடுகிறாா்.
தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் மேக்ரான் முன்னிலை வகிக்கிறாா். அவருக்கு அடுத்தபடியாக, தீவிர வலதுசாரிக் கொள்கையுடைய மரீனே லீ பென் அதிக ஆதரவைப் பெற்றுள்ளாா்.
முந்தைய தோ்தலைவிட இந்தத் தோ்தலில் மேக்ரானை எதிா்த்து போட்டியிடுவோா் அதிக பலம் பெற்றிப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது