இலங்கை செய்திகள்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை : களமிறங்க தயாராகும் முப்படையினர்

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு முப்படையினரின் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சிடம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

ஏற்பாடு செய்யும் போராட்டங்களை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நேற்று கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போக்குவரத்து கடமையில் ஈடுபடுத்த மேலதிக பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமகால அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பது இவர்களின் பிரதான கோரிக்கையாகும்.

Related posts

கொழும்பு காலி முகத்திடலில் மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது

Thanksha Kunarasa

இலங்கையில், இறக்குமதி செய்யப்படும் 600 பொருட்களின் வரி அதிகரிக்க வாய்ப்பு

Thanksha Kunarasa

நாளை புதிய அமைச்சரவை பதவியேற்கும்?

Thanksha Kunarasa

Leave a Comment