இலங்கை செய்திகள்

சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

அத்துடன் சகல தரப்பினரையும் அழைத்து நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும் மருத்துவ உபகரணங்களின் நிலை குறித்து பரிசீலிப்பது மிகவும் முக்கியம் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார அமைச்சின் கீழ், தொழில்நுட்ப குழுவொன்றை நியமித்து தற்போது ஏற்பட்டுள்ள மருந்து முகாமைத்துவத்துடன் தொடர்புடைய பரிந்துரைகளை உருவாக்குவது அவசியம் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு முகம்கொடுப்பதற்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பை பெறுவது அவசியம் என்றும் யோசனையை முன்வைத்துள்ளது.

Related posts

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவணி மன்னாரை வந்தடைந்தது.

namathufm

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமனம்

Thanksha Kunarasa

இந்தியாவிற்கு போட்டியாக உதவியை அறிவித்தது சீனா!

Thanksha Kunarasa

Leave a Comment