இலங்கை செய்திகள்

கொட்டும் மழையிலும் இரண்டாவது நாளாக ஜனாதிபதி செயலகம் முற்றுகை – தொடரும் போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான போராட்டம் 2வது நாளாக தொடர்ந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள பலர் அங்கிருந்து வெளியேறாத நிலையில் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு, காலி முகத்திடலில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்றுவரும் பாரிய போராட்டத்துக்கு நடுவே, ரமழான் நோன்பு துறக்கும் நிழ்வும் இடம்பெற்றது.

Related posts

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

Thanksha Kunarasa

டீசலுக்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் – பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

Thanksha Kunarasa

ஏப்ரல் 13, 14, 15 ஆம் திகதிகளில் மின்வெட்டு இல்லை-PUCSL

Thanksha Kunarasa

Leave a Comment