உக்ரைனின் கிழக்கில் பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பத்து மனிதாபிமான தாழ்வாரங்கள் திறக்கப்படும் என உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்தார்.
இந்த தாழ்வாரங்கள் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மற்றும் சபோரிஜியா பகுதிகளில் உள்ள பல நகரங்களை விட்டு வெளியேற மக்களை அனுமதிக்கும் என ஏ.பி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து வருகிறது. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் நடந்து வரும் சூழ்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உக்ரைனுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.