யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் டீசலை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நகர்ந்துகொண்டிருந்த லொறியொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த லொறியொன்று முன்னோக்கி நகர்த்தப்பட்டபோது பிரதான வீதிக்கு பிரவேசிக்க முயற்சித்த ஒருவர் மீது மோதியுள்ளது.
அச்சுவேலி – பத்தமேனி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
சந்தேகநபர் நாளை(11) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.