87,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகளை எதிர்வரும் 11 ஆம் திகதி ஏலத்தில் விடுவதற்கான ஏற்பாடுகளை இலங்கை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது.
திறைசேரி முறிகளுக்கான ஏல கொடுப்பனவுகளை அன்றைய தினம் காலை 11 மணி வரை மேற்கொள்ள முடியும் எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதற்கான விலைமனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.