உலகம் செய்திகள்

வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை

பிரபல பாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் அகாடமி குழு 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

வில் ஸ்மித் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து வில் ஸ்மித்திற்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை ஆஸ்கார் அமைப்பாளர்கள்- Academy of Motion Picture Arts and Sciences வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு அங்கேயே கிறிஷ் ராக்கிடமும், ஆஸ்கர் அகாடமியிடமும் வில் ஸ்மித் மன்னிப்புக் கோரினார்.

அதோடு, அகாடமியிலிருந்து தானாக முன் வந்து இராஜினாமா செய்தார்.
ஆனால், சம்பவம் நடந்த அன்று இரவே கிங் ரிச்சர்ட் என்ற படத்திற்காக வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

Related posts

முல்லைதீவு யுவதி – இந்தியாவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று சாதனை!

namathufm

ரஷ்யாவின் போருக்கு எதிராக பேர்லினில் 500000 பேர் – போராட்டம்.

namathufm

“நியோ-கோவ்” என்ற புதிய வைரஸ் கோவிட்டின் மற்றொரு திரிபு அல்ல

namathufm

Leave a Comment