மூதாட்டி ஒருவரை கொலை செய்து அவரின் காதணியை திருடிச்சென்ற சம்பவம் தலவாக்கலை – வட்டகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று (08) பிற்பகல் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
84 வயதான மூதாட்டியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் வாய், துணியால் கட்டப்பட்டுள்ளதுடன், கழுத்தும் துணியினால் இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூதாட்டி உயிரிழந்ததை அடுத்து அவர் அணிந்திருந்த காதணியை சந்தேகநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
சடலம் நீதவான் விசாரணைகளுக்காக குறித்த இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.