இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கிறிஸ் சில்வர்வூட் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளரும், வீரருமாவார்.
2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை இங்கிலாந்து வெற்றிகொண்ட போது, தலைமைப் பயிற்றுவிப்பாளர் Trevor Bayliss இற்கு கீழ், அந்த அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக இவர் செயற்பட்டிருந்தார்.
பின்னர் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக தெரிவாகியிருந்தார்.
பங்களாதேஷூடனான டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இவர் செயற்படவுள்ளார்.
கிறிஸ் சில்வர்வூட் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றவுள்ளார்.