உலகம் செய்திகள்

இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் உடனிருப்போம்; கனடா!

இலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக கனடா தெரிவித்துள்ளது.

இலங்கை மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

அதோடு, இந்த கடினமான காலத்தில் இலங்கை மக்களோடு கனேடியர்கள் இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தொடரும் போராட்டங்களின் விளைவாக கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கான பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

namathufm

இலங்கையில், தாயும் மகனும் செய்த செயல்.

Thanksha Kunarasa

இலங்கையில் பேருந்து சேவைகள் முழுமையாக முடங்கும் அபாயம்.

Thanksha Kunarasa

Leave a Comment