அதிகளவு பணம் அச்சிடப்பட்டுள்ளதால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (08) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 18 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினருடனான சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும், நிதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இதில் பங்கேற்கவுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.