இலங்கை செய்திகள்

13 , 14 ஆம் திகதிகளில் நாட்டில் மின்வெட்டு இல்லை?

எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாட்டில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்திக்கு போதுமான எரிபொருள் தொடர்ந்தும் கிடைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், நீர் மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றைய தினம் ஓரளவு மழை பெய்தது இதற்கு ஒரு காரணம் என அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக மின்சாரத்தின் தேவை குறைவாக இருக்கும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் சட்ட நடவடிக்கை – தவிசாளர் அறிவிப்பு !

namathufm

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கப்படும் மொத்தத் தொகையில் காவல்துறை மற்றும் படையினருக்கு செலவு

namathufm

தெனியாயவில் கணவரால் மனைவி வெட்டிக் கொலை

Thanksha Kunarasa

Leave a Comment