இலங்கை செய்திகள்

போராட்ட களத்தில் குதித்த மகா சங்கத்தினர்!

மகா சங்கத்தினரால் அமைதியான சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விகாரமகா தேவி பூங்காவில் நடைபெறவுள்ளது.

நாட்டை சீர்குலைக்காமல் மகாநாயக்கர்களின் தீர்மானம் அமுல்படுத்தப்படும் என்ற தொனிப்பொருளில் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் மாளிகைக்கு முன்பாகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே மகா சங்கத்தினரால் அமைதியான சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts

பதவியேற்று மறுநாளே பதவியை துறந்தார் அலி சப்ரி

Thanksha Kunarasa

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை விரைவில் – லக்‌ஷ்மன் கிரியெல்ல

Thanksha Kunarasa

பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்த வேண்டாம்: பாதுகாப்பு செயலாளர் கோரிக்கை

Thanksha Kunarasa

Leave a Comment