இலங்கை செய்திகள்

நாட்டின் நிதி அமைச்சர் நானே! – அலி சப்ரி

நிதியமைச்சர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது நிதியமைச்சர் என்ற வகையிலா தாங்கள் இங்கு உரையாற்றுகிறீர்கள் என சுமந்திரன் வினவினார்.

இதற்கு பதிலளித்த அலி சப்ரி,

‘நிதி அமைச்சராக நான் இன்று பேசுகிறேன். காரணம் ஜனாதிபதி அதனை என்னிடம் கையளித்தார். ஆனால் என்னை விட திறமையானவர்கள் இருந்தால் இதனை ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் நினைத்தேன். அதற்கு யாரும் இல்லை. நான் என் தாய்நாட்டை நேசிக்கிறேன். என்ன அவமானங்கள் இருந்தாலும், எவ்வளவு கேலிக்குரியவனாக இருந்தாலும், என் நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.’

Related posts

பிரித்தானிய விமானங்கள் பிரவேசிக்க தடை.

Thanksha Kunarasa

19 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு

Thanksha Kunarasa

இந்தியாவை தொடர்ந்து சீனாவிடம் கையேந்தும் இலங்கை

Thanksha Kunarasa

Leave a Comment