உலகம் செய்திகள்

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் முதல் கறுப்பின பெண்

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக, நீதிபதி கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் நியமிக்கப்படவுள்ளார்

வரலாற்று சிறப்புமிக்க செனட் வாக்கெடுப்பில் 53 – 47 வாக்குகள் என வித்தியாசத்தில் ஜாக்சனுக்கு வாக்குகள் கிடைக்க, அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முதல் கறுப்பின பெண் நீதிபதி ஆவது உறுதிசெய்யப்பட்டது.

முன்னதாக கடந்த ஆண்டே ஜாக்சனை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளித்தார். இவரின் ஒப்புதலுக்கு பின் வாக்கெடுப்பு நடத்தி நீதிபதி நியமனம் அறிவிக்கப்பட இருந்தது.

ஏனென்றால், ஜாக்சனை நீதிபதியாக நியமிக்க தொடக்கத்திலிருந்தே ஜனநாயகக் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து 100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க செனட் சபை ஜனநாயகக் கட்சியினருக்கும், குடியரசுக் கட்சியினருக்கும் இடையே 50-50 என சமமாகப் பிரிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடந்தது.

வாக்கெடுப்புக்கு கமலா ஹாரிஸ் தலைமை தாங்கினார். இதில், 53 வாக்குகள் கிடைக்க, இப்போது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் நியமிக்கப்படபோவது உறுதியாகியுள்ளது.

51வது வயதாகும் பிரவுன் ஜாக்சன், வாஷிங்டன் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். இன்னும் சில நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் நீதிபதி ஸ்டீபன் பிரேயர் ஓய்வு பெறவுள்ளார். அவரின் ஓய்விற்கு பின்னர் 116வது நீதிபதியாக பிரவுன் ஜாக்சன் பொறுப்பேற்க இருக்கிறார்.

நீதிபதி ஜாக்சன், ஹார்வர்ட் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் சட்டப் பட்டமும் பெற்றவர். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பொதுப் பாதுகாவலராகப் பணியாற்றிய ஒரே நீதிபதி இவர்தான் என்று கூறப்படுகிறது.

பிரவுன் ஜாக்சன் நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டது அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவால்தான். பராக் ஒபாமாவும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்தான். இந்த அடிப்படையில் மிக நெருங்கிய நட்பு இவர்கள் இருவருக்கும் இடையே உள்ளது. அதனடிப்படையிலேயே, தான் அதிபராக இருந்த காலகட்டத்தில் 2010ல் பிரவுன் ஜாக்சனை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார்.

அப்போது இருந்தே குடியரசு கட்சி ஆட்சியின் ஆதரவு மிகுந்தவராக இருந்து வருகிறார் நீதிபதி ஜாக்சன். ஜோ பைடன் தனது தேர்தல் வாக்குறுதியிலேயே கறுப்பின ஆப்ரிக்க அமெரிக்கரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது குறித்து பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த நியமனம் வந்துள்ளது

Related posts

GO HOME GOTA ! சுவரொட்டிகள் யாழ்.நகரின் பல இடங்களில்!!

namathufm

நிலையான வைப்பு தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

Thanksha Kunarasa

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு

Thanksha Kunarasa

Leave a Comment