நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணையை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் இரண்டாவது நாள் விவாதம் இன்று(07) இடம்பெற்றது.
இதன்போதே லக்ஷ்மன் கிரியெல்ல இதனை குறிப்பிட்டுள்ளார்.