இலங்கை செய்திகள்

ஊழியர்களை வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களை இன்று(07) முதல் வீடுகளிலிருந்து பணிபுரியுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் போக்குவரத்துக்கு தேவையான எரிபொருள் இன்மையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் உப தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார்.

அதனடிப்படையில், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விமான நிலையத்திற்கு தேவையான எரிபொருளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என ரஜீவ் சூரியாராச்சி கூறினார்.

எவ்வாறாயினும், விமான நிலையத்தின் ரேடார் கட்டமைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான எரிசக்தியை இடையூறியின்றி பெற்றுக்கொள்ள முடிவதாக அதன் உப தலைவர் தெரிவித்தார்

இதனிடையே, விமானங்களுக்கான எரிபொருள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி மீது வைத்திருந்த நம்பிக்கை வீணாகவில்லை! மஹா சங்கத்தினர் பெருமிதம்

namathufm

நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை

Thanksha Kunarasa

2021-இல் தெங்கு உற்பத்தி ஏற்றுமதி மூலம் 836 மில்லியன் டொலர் வருமானம்

Thanksha Kunarasa

Leave a Comment