உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிவ்சி நகரிலிருந்து ரஷ்யப் படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
நேட்டோ நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் இரண்டாவது நாளாகவும் பேச்சுவார்த்தை நடத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை,ரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்பை பாதிக்கும் என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் நேட்டோ உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.