இலங்கை செய்திகள்

இலங்கையில் என்ன நடைபெறுகின்றது என்பதை அவதானித்து வருகின்றேன் – நியுசிலாந்து பிரதமர்

பொருளாதார நெருக்கடிகளிற்கு மத்தியில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்வதால் இலங்கை நம்பமுடியாத கொந்தளிப்பான காலகட்டத்தை அனுபவித்து வருகின்றது என நியுசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் என்ன நடைபெறுகின்றது என்பதை அவதானித்து வருகின்றேன் அவர்கள் கொந்தளிப்பான காலகட்டத்தை அனுபவிக்கின்றனர்

இலங்கையின் உள்நாட்டு அரசியல் நிலைமை குறித்து வெளிவிவகார வர்த்தக அமைச்சிடமிருந்து தகவல்களை பெற காத்திருக்கின்றேன்.

நியுசிலாந்திற்கு ஏற்படக்கூடிய வெளிவிவகார கொள்கை பாதிப்புகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்தில் வெளிவிவகார அமைச்சிடமிருந்து தகவல்களை பெற காத்திருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசதலைமையை கண்டிக்கின்றீர்களா என்ற கேள்விக்கு பதிலளி;க்காத நியுசிலாந்து பிரதமர் இலங்கையில் இது அரசியல் ரீதியாகவும் உள்நாட்டிலும் கொந்தளிப்பான காலம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வறுமையை சவாலாக கொண்டு தங்கப்பதக்கம் வென்ற கிளிநொச்சி மண்ணின் வீராங்கனை

namathufm

றம்புக்கனை சம்பவம்- பொலிஸ் அதிகாரிகள்,மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரசன்னம்!

Thanksha Kunarasa

ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவு

Thanksha Kunarasa

Leave a Comment