உலகம் செய்திகள்

ரஷ்யாவின் சொகுசுக் கப்பலை கைப்பற்றிய ஸ்பெயின்!

ரஷ்யாவின் 99 மில்லியன் டாலர் மதிப்புடைய 78 மீட்டர் நீளமான டாங்கோ சொகுசுக் கப்பலை ஸ்பெயின் கடற்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

விக்டர் வெக்செல்பெர்க் (Viktor Vekselberg) என்ற ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான இந்த கப்பல், உக்ரைன் போருக்கு எதிரான நடவடிக்கையின் கீழ் அமெரிக்காவின் சார்பில் கைப்பற்றப்பட்டது. கப்பலில் இருந்த தரவு ஆவணங்கள் மற்றும் கருவிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக ஸ்பெயின் நாட்டு காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அமெரிக்க வங்கிக் கடன் மோசடி, பணப்பரிவர்த்தனை மீறல், மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டது என டாங்கோ கப்பலின் உரிமையாளர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஸ்பெயின் நீதித்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

நாசாவில் நீண்டகாலம் கடமையாற்றிய யாழ் தமிழர் உயிரிழப்பு

Thanksha Kunarasa

மணியந்தோட்டத்தில் பெண்ணின் சடலம் மீட்பு!

Thanksha Kunarasa

கூகுள் தொடங்கியுள்ள புதிய சேவை!

Thanksha Kunarasa

Leave a Comment