மின்சாரம் துண்டிக்கப்படும் போது புகையிரத கடவைகளை கடக்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு புகையிரத திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.
மின் தடை ஏற்பட்டால், ரயில் கடவைகளில் நிறுவப்பட்ட ஒளி சமிக்ஞை பனல்களை செயல்படுத்த பட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் நீண்ட காலமாக மின்வெட்டு காரணமாக அந்த ஒளி சமிக்ஞை அமைப்பு சில நேரங்களில் செயலிழந்துவிடும்.
இதன்காரணமாக மின்வெட்டு முடியும் வரை இவ்வாறான புகையிரத கடவைகளை கடக்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு புகையிரத திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.