உலகம்

பிரான்ஸ் அதிபர் தேர்தல் களம் : அடிப்படைச் சம்பள அதிகரிப்பில் வேட்பாளரது நிலைப்பாடு என்ன?

பிரான்ஸின் அதிபர் தேர்தலின் முதலாவது சுற்று வாக்களிப்பு எதிர்வரும்ஞாயிற்றுக்கிழமை நடை பெறவிருக்கிறது. அதிபர் மக்ரோன் இரண்டாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடுகிறார். மீண்டும் அவர் வென்றால் அண்மைய தேர்தல் வரலாற்றில் இரண்டாவது ஐந்தாண்டுகள் பதவிவகிக்கப் போகின்ற முதலாவது அதிபர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும். மக்ரனோடு சேர்த்து 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Nathalie Arthaud , Nicolas Dupont-Aignan , Anne Hidalgo , Yannick Jadot , Jean Lassalle , Marine Le Pen , Emmanuel Macron , Jean-Luc Mélenchon , Valérie Pécresse , Philippe Poutou , Fabien Roussel, Eric Zemmour ஆகியோரே அவர்கள். வாக்களிப்புக்கு ஓரிரு தினங்கள் இருக்கையில் வெளியாகியுள்ள முக்கிய கருத்துக் கணிப்புகள் முதலாவது சுற்றில் மக்ரோனுக்கும் மரின் லூ பென்னுக்கும் இடையே மிக நெருக்கமான போட்டி நிலவுவதாகச் சொல்கின்றன. கொரோனா தொற்று, உக்ரைன் போர் விளைவுகள் மக்களது அன்றாட வாழ்க்கைச் செலவைப் பெரும் சுமையாக மாற்றியுள்ள ஒரு நெருக்கடிக் காலத்தில் நடைபெறுகின்ற இந்தத் தேர்தலில் பன்னிரெண்டு வேட்பாளர்களும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் சம்பள அதிகரிப்புத் தொடர்பாக என்ன கூறியுள்ளனர். பார்ப்போம்.

🔶சம்பள அதிகரிப்புக்கு “ஆம்” என்று கூறியிருப்போர் :

நத்தாலி ஆர்த்தோ (Nathalie Arthaud):சிமிக் (Smic) என்கின்ற ஆகக் குறைந்த அடிப்படைச் சம்பளத்தை தற்போதைய 1,269 ஈரோவில்(net) இருந்து 2,000ஆயிரம்ஈரோவாக உயர்த்துதல்.🔹ஆன் கிடல்கோ (Anne Hidalgo):ஆகக் குறைந்த சம்பளத்தில் 15 வீதத்தை-சுமார் 200 ஈரோக்களை-அதிகரிப்பதாகஉறுதி மொழி.

🔹யான்னிக் ஜடோ (Yannick Jadot)ஆரம்பத்தில் 10 சதவீத(1,400)அதிகரிப்பும் பதவிக்காலத்தின் முடிவில் 1,500 ஈரோக்களாகவும் சம்பள உயர்வு.

🔹ஜோன் லாசால் (Jean Lassalle):1,400ஈரோக்களாக உயர்த்த விருப்பம்.

🔹ஜீன்-லூக் மெலன்சோன்(Jean-Luc Mélenchon) :வென்றால் மே மாதம் முதல்1,400 ஈரோவாக உடனடி அதிகரிப்பு.

🔹பிலிப் புட்டு (Philippe Poutou) :கண்ணியமாக வாழ்வதற்கு சம்பளத்தை 1,800 ஈரோக்களாக அதிகரிக்க முன்மொழிவு.

🔹ஃபேபியன் ரூசல்(Fabien Roussel) குறைந்தபட்ச ஊதியத்தை “1923 ஈரோக்கள் மொத்தமாக(gross) அல்லது 1500 ஈரோ நிகரமாக(net) “அதிகரிப்பதற்கு முன்மொழிகிறார்.

🔶சம்பள அதிகரிப்பு “இல்லை” என்று கூறியிருப்போர் :

🔹நிக்கோலஸ் டுபோன்ட் – ஐக்னன்(Nicolas Dupont-Aignan) குறைந்த பட்ச ஊதியத்தை அதிகரிக்க முன் மொழியவில்லை. ஆனால் பணியாளர்களிடம் “வெட்டும்”பங்களிப்புத் தொகைகளைக் குறைப்பதன் மூலம் அனைத்து சம்பளங்களிலும் 8% வீத அதிகரிப்பை உறுதியளிக்கிறார்.

🔹மரின் லூ பென் (Marine Le Pen) :சம்பள அதிகரிப்பு இல்லை. ஆனால் ஊதியங்களை 10 வீதம் அதிகரிக்குமாறு தொழில் வழங்கும் நிறுவனங்களை ஊக்குவித்தல்.

🔹எமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) : அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிப்புகள் இருக்காது. மக்களது கொள் முதல் சக்தியை அதிகரிப்பதற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்டது போன்று போனஸ் தொகைகள் மூன்று மடங்காக அதிகரித்து வழங்கப்படும். எந்த வித கழிவுகள், வரிகள் இன்றிதொழில் வழங்குநர்கள் அதனைச் சம்பளத்துடன் சேர்த்து வழங்குவார்கள்.

🔹வலெரி பெக்ரெஸ் (Valérie Pécresse) : சம்பள உயர்வு இல்லை. ஆனால் தனியார் துறைகளில் ஆகக் குறைந்த அடிப்படைச் சம்பளம் பெறுபவருக்கு முதலாளிகளுடைய பங்களிப்பில் 2.2 வீத அதிகரிப்பினை முன்மொழிகிறார்.

🔹எரிக் செமூர் (Eric Zemmour) : அடிப்படைச் சம்பளத்தில் எந்த உயர்வும் இருக்காது. ஊழியர்களது ஊதியத்தில் பெறப்படும் கழிவுகளைக் குறைத்தல்.13 ஆவதுமாதச் சம்பளத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

நோர்வே புதிய டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பியது ! காணொளி இணைப்பு.

namathufm

ரஷ்யா படையெடுக்காது என நம்பிய பிரான்ஸின் கணிப்புத் தோல்வியா? உளவுப் பணிப்பாளர் பதவி விலகல்!

namathufm

50-வது நாளில் உக்ரைன் – ரஷ்யா போர் அமைதியை வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்

Thanksha Kunarasa

Leave a Comment