இலங்கை செய்திகள்

கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பொருளாதார நிபுணர் சாந்தா தேவராஜன் ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிப்பு !

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மற்றும் பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி., உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் சாந்தா தேவராஜன் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஷர்மினி கூரே ஆகியோர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பலதரப்பு ஈடுபாடு மற்றும் கடன் நிலைத் தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் ஒரு சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர், தற்போதைய கடன் நெருக்கடியை நிவர்த்தி செய்து, இலங்கையின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மீட்சிக்கு வழிவகுக்கும் வழிகாட்டல்களை வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றத்திற்கு 10 நாட்கள் விடுமுறை

Thanksha Kunarasa

உக்ரேனின் அணு ஆயுத முயற்சியை அனுமதிக்க மாட்டோம்- ரஸ்ய வெளியுறவு அமைச்சர்

Thanksha Kunarasa

எரிபொருள் வழங்குவது தொடர்பில் புதிய கட்டுப்பாடு

Thanksha Kunarasa

Leave a Comment