ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் பாடசாலை நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாம் தவணை தொடக்கம் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதியுடன் நிறைவடையும் காலப்பகுதிக்குள் பாடசாலை நேரத்தை பூர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், பாடசாலை விடுமுறைகள் உள்ளிட்ட பாடசாலை அட்டவணைகள் அதிபர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.