உலகம் செய்திகள்

பெருவில் அரசுக்கெதிராக போராட்டம்

விலைவாசி உயர்வு காரணமாக பெருவில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் ஊரடங்கை அமல்படுத்துவதாக அந்நாட்டு குடியரசுத் தலைவர் பெட்ரோ காஸ்டில்லோ (Pedro Castillo) அறிவித்துள்ளார்.

பெருவில் கடந்த சில நாட்களாக எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தலைநகர் லிமாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், அரசுக்கெதிரான போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பெரு குடியரசுத் தலைவர் பெட்ரோ காஸ்டில்லோ தலைநகரில் ஊரடங்கை இன்று அறிவித்தார்.

மேலும், போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளதாகவும், இதுவரை 4 பேர் பலியாகியுள்ளதாகவும் பெரு அரசு தெரிவித்துள்ளது.

அதேவேளை இலங்கையிலும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை

Thanksha Kunarasa

மக்கள் விரும்பினால் தலைமை ஏற்க தயார்; ரணில் அதிரடி

Thanksha Kunarasa

ரஸ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம்! சீனா அறிவிப்பு!

Thanksha Kunarasa

Leave a Comment