செய்திகள் விளையாட்டு

IPL இல் சென்னை அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி !

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் சி.எஸ்.கே 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. ஆடிய மூன்று போட்டிகளிலும் வீழ்ந்து சி.எஸ்.கே ஹாட்ரிக் தோல்வியை அடைந்திருக்கிறது.

2020 ஆம் ஆண்டு சீசன் சி.எஸ்.கேவிற்கு அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கவில்லை. ப்ளே ஆஃப்ஸ் கூட தகுதிப் பெறாமல் லீக் சுற்றோடு சி.எஸ்.கே வெளியேறியிருந்தது. அந்த 2020 சொதப்பல்கள் மீண்டும் நிகழ்கிறதோ எனும் அச்சத்தில் மஞ்சள் படை இருக்கிறது. பஞ்சாபிற்கு எதிராக சி.எஸ்.கே ஏன் தோற்றது? இந்த தோல்வி தொடருமா? 2020 திரும்புமா?

ஸ்கோரை சேஸிங் செய்கிற அணிகளே தொடர்ச்சியாக வெல்லும் ட்ரெண்ட் இந்த சீசனிலும் தொடர்கிறது. சி.எஸ்.கே முதல் இரண்டு போட்டிகளில் தோற்றதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. ஏனெனில், கடந்த இரண்டு போட்டிகளிலும் சி.எஸ்.கே முதலில் பேட்டிங் செய்திருந்தது. 200+ ஸ்கோரை எடுத்த போதும் டார்கெட்டை டிஃபண்ட் செய்ய முடியாமல் தோற்றிருந்தது. பனியின் தாக்கம் காரணமாக பௌலர்களால் சரியாக பந்துவீச முடியவில்லை என்பது காரணமாக கூறப்பட்டது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான்.

Related posts

போராட்டத்தில் பங்கேற்ற பொலிஸ் அதிகாரி கைது!

Thanksha Kunarasa

முல்லைத்தீவு சிகை அலங்கார சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு.

namathufm

தாக்குதலை நிறுத்த முடியாது – ரஷ்யா !

namathufm

Leave a Comment