ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையிலான அரசாங்கம் நாளை (05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இன்று ருவிட்டரில் தெரிவித்துள்ளார். இது அரசாங்கத்தின் ‘இறுதியின் ஆரம்பம்’ என தெரிவித்துள்ளார்.
இதே வேளை,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் களுத்துறை கட்சி அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டு, நீர்தாரை பிரயோகம்.
தங்காலை Carton House எதிரே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டு மற்றும் நீர்த்தாரை பிரயோகம் இடம்பெறுகின்றது. பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லமான தங்காலையில் உள்ளது.