இலங்கை செய்திகள்

யாழ் – பல்கலைக் கழக கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் இடை நிறுத்தம்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாணவர் நலன்கருதி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்துப் பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதுடன்,விடுதிகளில் தங்கி நிற்கும் மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் பரீட்சை மற்றும் அத்தியாவசிய ஆய்வு நடவடிக்கைகளுக்காக மருத்துவ பீடத்தின் இறுதி வருட மாணவர்களுக்கு மாத்திரம் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த இந்திய போர் கப்பல்கள்!

Thanksha Kunarasa

முன்னாள் ஜனாதிபதி க்கு உத்தியோக பூர்வ இல்லத்தை நிரந்தரமாக வழங்குவதற்கு தடை உத்தரவு

namathufm

நாடாளுமன்றில் வெற்றியீட்டினால்ஆகக் குறைந்த சம்பளம் 1,500 ஈரோ!

namathufm

Leave a Comment