இலங்கை செய்திகள்

யாழில் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாணக்கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பெரும்பான்மை மாணவர்களால் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இன்று காலை யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இப் போராட்டம் இடம்பெற்று பரமேஸ்வரா சந்தி, பலாலி வீதி வழியாக யாழ் நகரை வந்தடைந்தது.

இதன் போது போராட்டக்காரர்கள் நகரை வலம் வந்து வீதிகளை மறித்து கோத்தபாய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு சென்று கோத்தபாய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு தமது போராட்டத்தை முடிவுறுத்தினர்

இதன்போது அரசிற்கு எதிராக பதாகைகளை தாங்கியாறு போராட்டம் இடம்பெற்றது.

Related posts

தெனியாயவில் கணவரால் மனைவி வெட்டிக் கொலை

Thanksha Kunarasa

யாழ் – பல்கலைக் கழக கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் இடை நிறுத்தம்!

namathufm

இலங்கைக்கு நிவாரணம் வழங்கிய தமிழக யாசகர்!

Thanksha Kunarasa

Leave a Comment