ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசிலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக அமரத் தீர்மானித்துள்ளது. நாளை மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
இதே வேளை இராஜாங்க அமைச்சர்களான பியங்கர ஜயரத்ன, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 எம்பிக்களும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி பாராளுமன்றத்தில் சுயேச்சை குழுவாக செயற்பட தீர்மானித்துள்ளனர் – துமிந்த திஸாநாயக்க தெரிவிப்பு.