இலங்கை செய்திகள்

சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய பதவி விலக மறுப்பு ! அமைச்சர் சிலர் நாட்டை விட்டு தப்பியோடம்!

சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ச தற்போதைய நிலையில் பதவி விலக மாட்டார் என அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் காட்டும் எந்தவொரு குழுவிற்கும் அரசாங்கத்தை ஒப்படைக்க அரச தலைவர் தயாராக இருக்கிறார்” எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. தற்போதும் கொழும்பில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச தலைவர் உள்ளிட்ட அரசாங்க தரப்பினர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மக்களிடம் இருந்து வெளியான எதிர்ப்பையடுத்து அமைச்சரவை அமைச்சர்கள் பலர் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நிஸ்ஸங்க சேனாதிபதி போன்ற சிலர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளனர் எனவும் தெரிய வருகின்றது.

Related posts

உக்ரேன் தலைநகரில் வெடிப்பு சத்தங்கள்; ஐரோப்பிய நாடுகள் பரபரப்பு .

Thanksha Kunarasa

வாழைக்காய்களை 2 மணித்தியாலங்களில் பழுக்க வைத்து விற்பனை !

namathufm

ஐ.நா.வின் தீர்மானம் தோல்வி!

Thanksha Kunarasa

Leave a Comment